June 15, 2010

கவிதைக் கும்மி - கொஞ்சம் பழசு

06/05/2008
முரசறிவிப்பைத் தொடர்ந்து முத்தமிழ்க் கவிஞர்கள் சிலர், "யார் கும்மிப்பவர்கள்" என்கிற தலைப்பில் மஞ்சூராரின் பெருத்த சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலுடன் வருகிறார்கள்.

கென்:
அர்த்தமண்டப அலறல் சீற்றம்
கும்மிருட்டில் சின்சினாட்டி கேவி எழும்
இரவுப் பறவையின் சிறகசைப்பில் கதகதக்கும்
ஆந்தையாய் வெறித்து வள்ளுவம் நெரிக்கும்
முடிவுறாப் பாதைகளின் மருங்கில்
அரசு இசைக்கும் கும்மி
அகிலம் முட்டும்
குகைச் சித்திரங்களில்
குருதி வழியும்

நிலா ரசிகன்:
தலை நனைக்கும் பறவை எச்சத்தில்
செண்பகப்பூ வாடத் துவங்கும்
குறிஞ்சித் தலைவன் கருணையால்
எய்ட்ஸ் விளங்கும்
கும்மி பொருமும்
தொகுப்பில் வந்த கவிதைக் கொத்தை
மொட்டைமாடி சிங்கம் படித்து மகிழ
சுயம் வெளிறி குருதியில் நனையும்
பட்டாசு வெடிக்கும்

திலகபாமா:
வெம்மையில் வேகும் வெற்றிட நீர்ப்பாசியின்
துயரங்களின் கண்ணீர் துளி வெள்ளம்
வெக்கையில் வாடி வெம்மையில் மாயும்
அசோகவனக் கட்டில்கள் படுக்கை அறையெங்கும் அழுதுவடித்தபடி
நீ இளைப்பாற நான் ஆலமரமாய்
நீயோ வேர்களைப் பொசுக்கிச் சிரிக்கிறாய்
(ஏதேதோ எழுதிக்கிட்டு இருக்கேன். தலைப்பு என்னன்னு சரியா சொல்லவே இல்லையே)

லாவண்யா:
நதியலையில் தூங்கும்
நிலவின் ஒளியலையில் உலவும்
தாய்லாந்துத் தொடர்கதை அரசியின்
கும்மிக் கோலங்களை யாரிடம் சேர்க்க
(இல்ல, இது சரியா வரல)

தொடர்கதை அரசியின்
தாய்லாந்துக் கும்மி
நதியலையில் தூங்கி
நிலவைத் தாலாட்டுமா
ஒளியலையில் உலாவுமா
(இதுவும் சரியா வரலையே...........)

ஒளியலையில் தாய்லாந்து
தூக்கத்தில் நதி நிலா
கும்மிகள் தொடர்கதையாய்
(கீதாம்மா, இது சரியா வந்திருக்கா?)

No comments: